Monday, 24 February 2025

க்

கலையும் கடற்கரையும் 
நண்பர்களும் உறவினரும் 
ஊரும் உணவும்
பார்த்தால் சென்னை அழகு.

சாலையும் ஓரமும் 
கூவமும் அடையாறும் 
புழுதியும் தூசும்
கண்டால் சென்னை அழுக்கு.

அகாரம் உகாரமானதால் 
வந்த வி(வ)காரம்!
ஒரு மெய்யெழுத்தினால்
மாறிய தலையெழுத்து!


3 comments:

AruneM said...

Thanks Seshu for the punchline at the end!!

rangarajan said...

unfortunately the truth :(

இளங்குமரன் said...

அழகான கவிதை. தமிழ் விளையாட்டு அழகுதான். வாழ்க.