இசைதரும் அமைதியில்
தமிழென்னும் அமிழ்தினில்
கவிதையின் சுவையினில்
குழந்தையின் சிரிப்பினில்
மழலையின் அர்த்தத்தில்
மெளனத்தின் சத்தத்தில்
பூக்களின் இதழ்களில்
பூமியின் இயக்கத்தில்
குழலின் இன்னிசையில்
குறளின் இல்லறத்தில்
கடல்களின் சீற்றத்தில்
இயற்க்கையின் தோற்றத்தில்
தோழமையின் மகிழ்ச்சியில்
தனிமையின் வீழ்ச்சியில்
கடந்தகால நிகழ்வுகளில்
எதிர்கால கனவுகளில்
விடியாத இரவுகளில்
தூங்காத விழிகளில்
உந்தன் நினைவுகளே
தவழுமென் மனதில்.
தமிழென்னும் அமிழ்தினில்
கவிதையின் சுவையினில்
குழந்தையின் சிரிப்பினில்
மழலையின் அர்த்தத்தில்
மெளனத்தின் சத்தத்தில்
பூக்களின் இதழ்களில்
பூமியின் இயக்கத்தில்
குழலின் இன்னிசையில்
குறளின் இல்லறத்தில்
கடல்களின் சீற்றத்தில்
இயற்க்கையின் தோற்றத்தில்
தோழமையின் மகிழ்ச்சியில்
தனிமையின் வீழ்ச்சியில்
கடந்தகால நிகழ்வுகளில்
எதிர்கால கனவுகளில்
விடியாத இரவுகளில்
தூங்காத விழிகளில்
உந்தன் நினைவுகளே
தவழுமென் மனதில்.